நீங்கள் யார் என்று அறிவதற்கு உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் உண்டு..!!

நம்மை நாமே அறிந்து கொள்வது என்பது வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் மிக முக்கியமான பயணங்களில் ஒன்று நாம் யார் நாம் எதை விரும்புகிறோம் எதற்கு பயன்படுகிறோம் என்பதை புரிந்து கொள்வது அர்த்தமுள்ள மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும். நம்மைப் பற்றி நாம் ஆழமாக சிந்திப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல உண்மையான சுயத்தை கண்டறிய நாம் சில கடினமான கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்..

உங்களுக்கு உண்மையில் எது முக்கியம் : பணம் புகழ் மற்றவர்களின் அங்கீகாரம் இவை எல்லாமே மேலோட்டமான விஷயங்கள் உண்மையில் உங்கள் மனசாட்சி அதை முக்கியம் என்று கருதுகிறது என்று உங்களுக்குள் கேளுங்கள்..

நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள் : உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன ஏதோ கடமைக்கு என்று நாட்களை தள்ளுகிறீர்களா அல்லது ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணிக்கிறீர்களா..

உங்களுக்குள் இருக்கும் பயம் எது : உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் அந்த ஆழமான பயம் என்ன அந்த பயத்தை வெல்ல நீங்கள் என்ன செய்ய வேண்டும்..

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் கவலைப்படுவதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் : சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்கிறீர்களா அல்லது உங்கள் உண்மையான விருப்பப்படி வாழ துணிகிறீர்களா..

நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா : மேலோட்டமான சந்தோஷமா அல்லது ஆழ்மனதில் அமைதியும் ஆனந்தமும் நிலவுகிறதா மகிழ்ச்சியாக இல்லை என்றால் அதை மாற்ற நீங்கள் என்ன செய்ய முடியும்..

நீங்கள் செய்யும் வேலையை ஏன் செய்கிறீர்கள் : பணத்துக்காக மட்டுமா அல்லது அந்த வேலையில் உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருக்கிறதா உங்கள் வேலை உங்கள் வாழ்க்கையின் நோக்கத்துடன் பொருந்துகிறதா..

நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள் ஏன் : நீங்கள் மதிக்கும் நபரின் குணாதிசயங்கள் என்ன அந்த குணங்களை நீங்களும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறீர்களா..

உங்களின் மிகப்பெரிய சாதனை என்ன : உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெருமைப்பட்ட தருணம் எது? அந்த சாதனையை நீங்கள் எப்படி நடத்தினீர்கள்..

நீங்கள் மாற்ற விரும்பும் விஷயம் என்ன : உங்களிடம் உள்ள எந்த பழக்கம் அல்லது குணம் உங்களுக்கு பிடிக்கவில்லை அதை மாற்ற நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்..

உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன ; உங்களுடைய தனித்துவமாக்கும் பலம் என்ன நீங்கள் மேம்படுத்த வேண்டிய பலவீனங்கள் என்ன இப்படி உங்களுக்குள் பல கேள்விகளை கேட்கும் பொழுது உங்களுக்கே தெரியும் நீங்கள் யார் என்று..!!

Read Previous

இந்த குணங்களை கொண்டிருந்தால் நீங்கள் அதிபுத்திசாலி தான்…!!

Read Next

எப்பவும் Mood அவுட் தானா அதிலிருந்து வெளிவர எத்தனையோ வழிகள் இருக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular