
இந்திய அஞ்சல் துறையின் கீழ் கிராமின் தாக் சேவாக் பணிக்கான 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமின் தாக் சேவாக்:
இந்திய அஞ்சல் துறையானது கிராமின் தாக் சேவாக் பணிக்கான 44,228 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மாவட்ட ரீதியாகவும் அதன் காலிப்பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 115 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் 18 வயது பூர்த்தியான மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 05.08.2024ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.