ஒருவரின் பிறந்த ராசி மற்றும் பிறந்த தேதியை வைத்து ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது..
ஒருவரின் ஆளுமையை தெரிந்து கொள்ள அவர்களின் ராசி உதவுவது போல அவர்களின் பிறந்த நாளும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறிந்து ஒன்று. நீங்கள் பிறந்த நாள் உங்கள் ஆளுமையை எவ்வாறு பாதிக்கிறது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் நீங்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தீர்கள் என்பது முக்கியமானதாகும் நீங்கள் பிறந்த கிழமை உங்களைப் பற்றிய சில ரகசியங்களை வெளிப்படுத்தும் இந்த பதிவில் உங்களின் பிறந்த நாளில் அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்..
ஞாயிற்றுக்கிழமை : நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவராக இருந்தால் நீங்கள் மிகவும் தாராள குணம் கொண்டவராகவும் நகைச்சுவையாகவும் நம்பிக்கையுடனும் மற்றும் உற்சாகமாகவும் இருக்கலாம் நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் காந்த ஆளுமை கொண்டுவராக இருக்கலாம், நீங்கள் தைரியமானவராகவும் சுதந்திரத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள் உங்களுக்குள் நிறைந்திருக்கும் ஆற்றல் உங்களை மிகவும் சுதந்திரமானவராக மாற்றலாம் நீங்கள் பிரகாசமான மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை கொண்டுவராக இருக்கலாம், இதனால் நீங்கள் எப்போதும் கூட்டத்தில் தனித்து நிற்கலாம். உங்கள் சக்தி வாய்ந்த ஆளுமையின் காரணமாக நீங்கள் நட்பு வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவராகவும் இருக்கலாம் தனித்துவமானவராகவும் இருக்கலாம் உங்களின் பேச்சாற்றல் உங்களுடைய வியாபாரம் மற்றும் வேலையில் வெற்றியை கொடுக்கும்..
திங்கள் :
நீங்கள் திங்கள்கிழமையில் பிறந்திருந்தால் உங்கள் ஆளுமையின் படி நீங்கள் அடக்கமானவராகவும் அமைதியானவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருப்பீர்கள் நீங்கள் அதிக உணவுத் திறன் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்பவராக இருக்கலாம் மேலும் முடிவெடுப்பதில் மெதுவானவராக இருக்கலாம் நீங்கள் உடல் ரீதியாகவும் வசீகரமாக இருக்கலாம் மற்றும் அமைதியான மற்றும் மர்மமான ஆற்றலை வெளிப்படுத்தலாம், நீங்கள் வீட்டு சூழலை அதிகம் விரும்பலாம் குறிப்பாக அம்மாவிடம் அதிகம் அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள் உறவுகளில் நிலைத்தன்மை பாதுகாப்பை விரும்பலாம், நீங்கள் உங்கள் குடும்ப உறவுகளை பாதுகாப்பவராக இருக்கலாம் புத்திசாலித்தனத்தை விட உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள் உதவி இல்லாத தருணங்களில் வெடித்து அழுபவராக இருப்பீர்கள்..
செவ்வாய் :
நீங்கள் செவ்வாய்க்கிழமையில் பிறந்திருந்தால் நீங்கள் சுறுசுறுப்பானவர் ஒழுக்கம் வெளிப்படையான மனது மற்றும் நேர்மையானவர்களாக இருக்கலாம் நீங்கள் ஒரு ஆற்றல் மிக்க மற்றும் அதிக உறுதியான ஆளுமை கொண்டுவராக இருக்கலாம் உங்களிடம் வலிமையான அதே சமயம் கவர்ந்திருக்கும் கருணை நிறைந்து இருக்கலாம் நீங்கள் தைரியமான அதே சமயம் பொறுமையற்ற அதிர்வுகளை வெளிப்படுத்தலாம், உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பதில் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம், நீங்கள் தைரியமான மனப்பான்மை கொண்டவராக இருக்கலாம் மற்றும் முன்பின் தெரியாத விஷயங்களை செய்ய பயப்பட மாட்டீர்கள் பணத்தின் மீது அதிகம் விருப்பம் கொண்டவர்களாக இருக்கலாம் பேசுவதற்கு முன் யோசிக்காமல் பேசுவதாக இருக்கலாம் நீங்கள் விமர்சனங்களை வெறுப்பவராக இருக்கலாம்…
புதன் : நீங்கள் புதன்கிழமையில் பிறந்திருந்தால் நீங்கள் அசாதாரணமான தகவல் தொடர்பு திறன் கொண்டிருக்கலாம், உங்களது வேலைகளை முடிப்பதில் மற்றும் இலக்குகளை அடைவதில் நீங்கள் திறமையாகவும் சிறந்தவராகவும் இருக்கலாம், நீங்கள் எப்போதும் சாகச அனுபவங்களை தேடிக் கொண்டிருக்கலாம், இந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் எளிதாக கழிப்பிடலாம் எனவே நீங்கள் காதல் மற்றும் திருமணத்தில் சில சிக்கல்களை அனுபவிக்கலாம் உங்கள் உண்மையான திறமை கண்டறியும் வரை நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் அல்லது வணிகம் அல்லது பணிகளை மேற்கொள்ளலாம், எங்கள் தோல்வி அல்லது ஆபத்துகளை சந்திக்க பயப்படாமல் இருக்கலாம்..
வியாழன் : நீங்கள் வியாழன் அன்று பிறந்திருந்தால் நீங்கள் எதார்த்தமானவர்கள் அதிக நல்லொழுக்கம் கொண்டவர்கள் லட்சிய வெறி கொண்டவர்கள் நீங்கள் சிறந்த பேச்சாளர்கள் மென்மை வருகுத்துடன் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம் எதிர்மறை ஆற்றல் மற்றும் பெரும்பாலும் உங்களை பாதிக்காமல் பாதுகாப்பாக இருப்பீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ஆபத்தான சூழ்நிலையிலும் உள்ள வாய்ப்பை பார்த்தீர்கள் நிர்வாகம் தலைமைத்துவம் போன்றவற்றில் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம், அனைத்தையும் விட குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருப்பீர்கள்…
வெள்ளி : நீங்கள் வெள்ளிக்கிழமை பிறந்திருந்தால் நீங்கள் உற்சாகமான நேர்மை ஆற்றல் நிறைந்த மற்றும் அவர்களுக்கு உதவுவதாக இருப்பீர்கள் புது இடங்களுக்கு பயணம் செல்வதிலும் ஆராய்வதிலும் நீங்கள் வெறிகொண்டவராக இருக்கலாம், அவசரத்தில் எப்போதும் தப்பான முடிவெடுப்பவராக இருப்பீர்கள், நீங்கள் அழகு காதல் இன்பம் மற்றும் ஆடம்பரமான விஷயங்களை விரும்புபவர் ஆக இருக்கலாம், உங்கள் வாழ்க்கை முறையை பராமரிக்க கடினமாக உழைக்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கயை அனுபவிக்க வழிவகுக்கும் கவர்ச்சியான வேலைகளை விரும்பலாம்..
சனி : நீங்கள் சனிக்கிழமை பிறந்திருந்தால் நீங்கள் பிடிவாதமாகவும் கண்டிப்பானவர் ஆகவும் விவேகமானவராகவும் அதேசமயம் கடின உழைப்பாளியாகவும் இருக்கலாம், நீங்கள் அடக்கமான புத்திசாலி தனம் கொண்டவர்,கண்டிப்புடன் எதார்த்த நபர் நீங்கள், நீங்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தவும் விரும்பலாம். உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பவர்..!!