நீங்க வெள்ளி மோதிரத்தை இந்த விரல்லையா அணிஞ்சிருக்கீங்க?.. அப்போ சனி உங்களை எப்போதும் பின்தொடர்ந்துட்டே இருக்கும்…
பொதுவாக மக்கள் அனைவரும் ஆபரணங்களின் மீது அதிகம் ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆபரணங்களில் விலை குறைவாக இருப்பது வெள்ளி ஆபரணம் மட்டும்தான். வெள்ளி மோதிரத்தை அணிவதால் ஆன்மீக ரீதியாக உண்டாகும் சிக்கலை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
அதாவது, ஜோதிட சாஸ்திரத்தின்படி வெள்ளி மோதிரம் அணிவதால் நன்மைகள் உண்டாகும். ஆனால் எந்த விரலில் அணியவேண்டும் என்ற ஐதீகம் உண்டு. அதாவது வெள்ளி மோதிரத்தை கட்டை விரலில் அணிவதால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெண்கள் வெள்ளி மோதிரத்தை இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிவதால் ஐஸ்வரியம் பெருகும். மேலும், வெள்ளி மோதிரம் அணிவதால் நம் ராசியில் இருக்கும் சூரியன் வலுப்பெறும். மேற்சொன்ன பலன்களை தெரிந்துகொண்டு இனி சரியான விரலில் மோதிரம் அணிந்து வாழ்வில் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.