நீடிக்கும் மகிழ்ச்சியின் ரகசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா…!!

மகிழ்ச்சி என்பது வெளியே தெரியும் பொருள் அல்ல சில நேரங்களில் அழகான பெண்ணுக்கு பொருத்தமில்லாத மணமகன் அமைந்தது பார்த்து வருத்தப்படுவோம். விசாரித்தால் அது காதல் திருமணமாக கூட இருக்கலாம் அந்த பெண் அவனை எப்படி விரும்பினால் என்று கூட நினைப்போம் அந்தப் பெண் மகிழ்ச்சியான தருணத்தில் அந்த ஆணை சந்தித்திருக்க வேண்டும்…

மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தவுடன் உலகமே காலடியில் இருப்பதாக இருமாப்புடைபவர்களும் உண்டு. அவர்கள் ஆணவத்துடன் இருப்பதாக தெரியும் ஆனால் அது ஐஸ்கிரீமை பார்த்தவுடன் துள்ளி குதிக்கும் மனநிலை என்பது முதிர்ச்சடைந்தவர்களுக்கு தான் தெரியும். வெளியே தெரியும் மகிழ்ச்சியினும் உள்ளே ஊரும் நிறைவு இனிமையானது. மகிழ்ச்சியை நெறிப்படுத்த தெரிந்தால் எந்த நொடியிலும் கலங்காமல் வாழ முடியும். ஒரு இரணனுக்கு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதால் ஏகப்பட்ட மகிழ்ச்சி அவனால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை புத்தி சுவாதீனம் அற்றவன் போல் நடந்து கொண்டான். அவன் நடத்தையை கண்டு பயந்து அவன் விட்டார்கள் புகழ்பெற்ற மருத்துவரிடம் அழைத்து சென்றனர் அவனை பரிசளித்த மருத்துவர் உன் வியாதியை குணப்படுத்த முடியாது இன்னும் இரு வாரங்களில் நீ இறந்து விடுவாய் வீட்டுக்கு போ என்றார். பிறகு அவனிடம் ஒரு கடிதம் தந்தார். இதைக் கேட்டதும் இளைஞனின் மகிழ்ச்சி எல்லாம் ஆவி ஆகிவிட்டது வழியில் மருத்துவரின் நண்பரை பார்த்து அவர் கொடுத்த கடிதத்தை கொடுத்தான். அவர் அதைப் படித்து சிரித்தார் அந்த கடிதத்தில் இந்த இளைஞன் ஆனந்த மனநிலையில் எல்லையை தாண்டி இருந்து விட்டார். இது அவர் இதயத்தை பாதித்துவிட்டது நான் அவன் இறந்து விடுவான் என்று சொன்னேன் அது அவரை அதிர்ச்சடைய செய்தது இந்த அதிர்ச்சி அவருடைய அதிகப்படியான மகிழ்ச்சியை குறைத்து இதயத்தை சமநிலைக்கு கொண்டு வர தான் உன்னிடம் வருவதற்குள் சரியாகி இருப்பான் என்று எழுதியிருந்தது. மகிழ்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்து நெறிப்படுத்தி அதை நீட்டிக்க செல்ல இயலும். எப்போதும் இன்புற்று இருப்பவர்கள் வெளியே தங்கள் சந்தோஷத்தை காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை சிரிக்கும் பலருடைய கண்களில் இருக்கும் தேவையில்லாத பக்கங்களை காண முடியும். என் மகிழ்ச்சி எல்லோருக்கும் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலையை ஆன்மீக மனநிலை. அதற்காக மகிழ்ச்சியில் கொண்டாட்டங்கள் தேவை இல்லை என்பதல்ல சின்ன சின்ன நிகழ்வுகளையும் திருவிழாவாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை பகிர்ந்து கொள்வதே மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளலாம். கொண்டாட்டம் என்பது குடிப்பதும் கும்மாள விடுவதும் அல்ல முழு நிலவே மும்முரமாக தரிசிப்பது வேறு நீரை கூட தீர்த்தமாக பெருகுவதும் தான். நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதை விட எவ்வளவு விழிப்புணர்வுடன் சாப்பிடுகிறோம் என்பதுதான் கொண்டாட்டத்தின் உயரத்தை தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகரிக்கும் போது வாழ்க்கை சரிவடைகிறது அடுத்தவர்கள் துன்புறுத்தாததாக கொண்டாட்டமாக மற்றொருவரை எரிச்சடைய செய்யாத மகிழ்ச்சி அனைவரையும் இருக்கின்ற பேரின்ப நிகழ்வாக மலரும்..!!

Read Previous

குறைகளை மனதில் வைத்து ஊக்கத்தை இழக்காதீர்கள் : அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

நம் குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular