நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட்:
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் சார்பில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீட்டு அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2024-25 ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் கல்வியை ஒன்றிய அரசு பொதுப் பட்டியலுக்கு எடுத்து சென்றதால் தான் பிரச்சனை என்றும் கூறியுள்ளார். மேலும் மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு, வேறு பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தினால் எப்படி சரியாக இருக்கும் என்றும் தேர்வில் நடந்த குளறுபடிகள் காரணமாக மக்கள் நம்பிக்கையை இழந்து உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.