பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் பல பேர் மருத்துவர்களாக ஆசைப்படுவது வழக்கம். ஆனால் அதில் சில பேரால் மட்டுமே மருத்துவர்களாக ஆக முடிகிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் அந்த கனவு பல மாணவர்களுக்கு கலைந்து விடுகிறது. இதன் முக்கிய காரணம் நீட் தேர்வு. கடினமான இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற மாணவர்கள் கடுமையாக படிப்பது வழக்கம்.
ஆனால் இந்த தேர்வில் நடக்கும் மோசடிகளால் பல மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது. சென்ற வருடம் இந்த தேர்வு நடக்கும் போது நடந்த மோசடிகள் ஏராளம். ஆகையால் மக்களுக்கு நீட் தேர்வின் மேல் இருந்த மதிப்பு முற்றிலுமாக குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இந்த வருடம் மோசடிகளை கட்டுப்படுத்த தேசிய தேர்வு முகமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது வினாத்தாள்கள் கசிவு போன்ற மோசடி புகார்களை அழிக்க புதிய இணையதளங்கள் வெளிவந்துள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN போன்ற இனிய தலங்களின் வழியாக புகார்களை பதிவு செய்யலாம் என்று NTA கூறியுள்ளது. மேலும் மோசடி செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மோசடியில் ஈடுபடுபவரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறியுள்ளது.




