இந்தியா முழுவதும் நீட் தேர்வுகள் முடிந்து அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையால் வெளிப்படையான சமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்கு உயர்மட்ட நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சரகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது .இந்த குழுவிற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்க உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் தேசிய தேர்வு முகமயில் என்ன தவறு என்று கண்டுபிடிப்பார். வினாத்தாள்கள் எப்படி கசிந்தது? நீட் தேர்வில் எப்படி முறைகேடு ஏற்பட்டது..? என ஆராய இந்த குழு உருவாக்கப்பட்டது. டாக்டர் கே ராதாகிருஷ்ணன் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு கேரளா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின்னர் 1976 இல் பெங்களூரில் ஐஐஎம் -யில் பிஜிடிஎம் பட்டம் பெற்றார் மேலும் 2000 ஆண்டில் ஐஐடி கரக்பூரில் இந்திய புவி கண்காணிப்பு அமைப்புக்கான சில உத்திகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதாகிருஷ்ணன் விக்ரம், சாராபாய் விண்வெளி மையத்தில் பொறியாளராக தனது பயணத்தை தொடங்கினார். விண்வெளி பயன்பாடுகள் மற்றும் விண்வெளி திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பதவிகளை இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராகவும் தேசிய தொலை உணர்த்திறன் அமைப்பின் இயக்குனராகவும் சர்வதேச அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இதில் அரசுகளுக்கு இடையேயான கடல்சார் ஆணையத்தின் துணைத் தலைவர் இந்திய பெருங்கடல் உலக அறிவியல் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஐநாவின் COPUOS STSC பணிக்குழுவில் தலைவர் போன்ற பதவிகளை தலைமைத்துவம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.