தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு குறித்து பலமுறை பல கருத்துக்களை கூறியுள்ளார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இதையடுத்து இதற்கு பதில் கடிதம் எழுதிய ராகுல் காந்தி அவர்கள் அக்கடிதத்தில், நீட் தேர்வு நமது உயர் கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்துகிறது எனவும் தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் உங்கள் கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், நீட் இளநிலை முடிவுகள் குளறுபடிகளுக்கு பிறகு மாணவர்களின் நீதிக்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.