நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா..? இந்த காயை உணவில் சேர்த்தால் போதும்.!!

சாதாரணமாக கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கக்கூடும் அவரக்காய், ஆயுளை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்க தேவையான முக்கிய சத்துக்களை அளிக்கின்றது. அவரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து, காப்பர் ,பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கக்கூடிய அவரைக்காய் நன்மை குறித்து இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். அவரைக்காயில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

அதேபோல் அவரைக்காயில் உள்ள எல் -டோப்பா என்ற அமினோ அமிலம் அதிக அளவில் உள்ளதால் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் அவரைக்காயில் உள்ள கால்சியம் சத்துக்கள் உடலில் உள்ள பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுவாக வைக்க உதவுகிறது.

அவரைக்காயில் உள்ள இரும்பு சத்து உடலில் உள்ள ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்க பயன்படுகிறது .மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனை போக்க அவரக்காய் பயன்படுகிறது. குறிப்பாக அவரக்காய் விதைகளை வேகவைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனை வயிற்று பிரச்சனை ,வயிற்றில் புண் இருந்தாலும் அவற்றை ஆற்றுவதற்கு பயன்படுகிறது.

Read Previous

டெங்கு காய்ச்சலை இயற்கை முறையில் தடுக்கும் எளிய முறைகள் இதோ.!!

Read Next

மழைக்காலத்தில் உடலை பாதுகாக்கும் துளசியின் தூய்மையான நன்மைகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular