இந்த நவீன காலகட்டத்தில் நாகரிகம் தொழில்நுட்பம் போன்றவை எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது அதே அளவிற்கு மனிதனின் வியாதிகளும் மன அழுத்தமும் அதிகரித்துள்ளது. மனிதருக்கு ஏற்படும் வியாதிகளுக்கும் முக்கியமான காரணம் இந்த மன அழுத்தம் தான். இந்த மன அழுத்தத்தால் பல பேர் மிகவும் சிரமப்படுகிறார்கள் சிலர் இந்த மன அழுத்தத்தால் குடும்பங்களில் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த மன அழுத்தல் நிறைய குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் நிலையில் தள்ளப்படுகிறது.
மனிதனின் ஆயுள் காலம் இந்த மன அழுத்தத்தால் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என இந்த ஆய்வுகள் கூறுகின்றன. அன்றாட வாழ்வில் நாம் அதிகமாக சமீப காலமாக கேட்பது என்னவென்றால் மன அழுத்தம் காரணமாக இவன் தற்கொலை செய்து கொண்டான் போன்ற செய்திகளை அதிகமாக நாம் கேட்கிறோம். மன அழுத்தம் என்பது இவ்வளவு கொடிய வியாதியா என்று கேட்டால் ஆமாம் என்று தான் கூறுகிறார்கள் மருத்துவர்கள். இந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் போதுமான தூக்கம் இல்லாத காரணமாகும். மேலும் பல பிரச்சினைகள் நினைத்து வருந்துவது அதிகப்படியான சிந்தனை போன்ற காரணங்களால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.
கட்டிப்பிடி வைத்தியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதையெல்லாம் நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு இந்த கட்டிப்பிடி வைத்தியம் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினமும் வேலைக்குச் செல்லும் முன்பு சிறிது நேரம் உங்கள் வாழ்க்கை துணையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்கள். மனம் விட்டு பேசுங்கள். கல்யாணம் ஆகாதவர்கள் உங்களுக்கு பிடித்த நண்பர்கள் காதலிப்பவர்கள் தன்னுடைய காதலி போன்றவர்களை கட்டுப்பிடித்து உங்கள் மனதில் உள்ளவற்றை பேசுங்கள். இவ்வாறு செய்வதால் உடல் அளவிலும் சரி மன அளவிலும் சரி நிறைய மாற்றங்கள் ஆரோக்கியமாக நிகழ்வதை நம்மால் கண்கூட பார்க்க முடியும். இதை பல அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. மேலும் தினமும் கட்டிப்பிடி வைத்தியத்துடன் நாளை தொடங்கும் பொழுது அந்த நாள் மிகவும் பாசிட்டிவ் ஆகவும் எனர்ஜி உடனும் தொடங்குகிறது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.




