இன்றைய தலைமுறையினர் இளைஞர் முதல் முதியவர்கள் வரை சோசியல் மீடியாவில் தங்களின் வாழ்க்கையை திணித்துள்ளனர், காலம் நேரமின்றி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை எடுப்பது ரூல்ஸ் பகிர்வது இவற்றையே தொழிலாக வைத்து வருகின்றனர், இன்னும் பலர் இதன் மூலம் வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்..
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது, சீனாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அதிகமாக ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதனாலும் ஸ்மார்ட் போன்கள் மூலம் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் எடுப்பது புகைப்படங்கள் பகிர்வது ரிலீஸ் பார்ப்பது மனநலத்தை பாதிக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது, சீனா, மலேசியா, தைவான் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பான்மையான மாணவர்கள் மனநலம் பாதித்து உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது, அதிகமாக சமூகத்தை பயன்படுத்துவதனால் உடல் மட்டும் மனரீதியாக சோர்வடைந்து மன நலத்தை பாதிக்கும் இதனால் சமூக வலைதளத்தில் நேரத்தை வீணடிக்காமல் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது நல்ல ஆயுட்காலத்தை தரும் என்று கூறுகின்றனர்..!!