
நீதிமன்றம் அனுப்பிய சமன்… டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு..!!
அமெரிக்கா நாட்டி ல் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இந்த புகார்களை ஆய்வு செய்ய நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்திருந்தது. இதனை அடுத்து டிரம்ப் மீது நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறாக செயல்பட்டது, போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் முடிவில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்யாமல் தடுக்க டொனால்ட் டிரம்ப் சதி வேலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப்க்கு வாஷிங்டன் நீதிமன்றம் சமன் அனுப்பியது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாதத்திற்கு செல்வதை தடுக்க தான் இப்படி ஒரு சதி வேலை நடக்கிறது என டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலில் முறை கேடு செய்ய முயற்சி செய்திருந்தாலும் தற்போது அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.