நீரிழிவு நோயாளியா நீங்கள்..?? எலுமிச்சையை,இப்படி பயன்படுத்தினால்,சுகர் லெவல் குறையும்..!!

Oplus_131072

 

நீரிழிவு நோயாளிகள் பொதுவாக தங்கள் உணவில் பல விஷயங்களை தவிர்க்க வேண்டியுள்ளது. உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.சில,வீட்டுவைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும்,சிலவற்றின்,மூலமாகவும், நாம் சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். எலுமிச்சையைப் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். எலுமிச்சையில்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த வைட்டமின் சி உள்ளது. இதன் மூலம் உடலுக்கு வேறு பல நன்மைகளும் கிடைக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் பலருக்கு எலுமிச்சையுடன்,எந்தெந்த,பொருட்களை கலந்து சாப்பிடலாம் என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. எலுமிச்சையுடன் சேர்க்கும் பிற பொருட்களால் உடலுக்கு தீங்கு வரக்கூடுமோ,என்றஅச்சம்,நோயாளிகளுக்கு இருப்பதுண்டு. நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் எந்த வகையில் எலுமிச்சையை சேர்த்தால் நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

*நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது.?*

– எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக கருதப்படுகிறது. இது நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு, ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள்மற்றும்,குறைந்த,கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த காரணத்தினால் எலுமிச்சை இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் பல சத்தான கூறுகள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.
– உங்கள் உணவில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிவது உங்கள் உணவில் எலுமிச்சை சேர்க்க எளிதான வழியாகும்.
– காலையில் ஒரு டம்ளர் எலுமிச்சம் பழச்சாறு குடித்து வந்தால், பல நன்மைகளைப் பெறலாம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்தால் போதும்.
– எலுமிச்சை மூலம் டீடாக்ஸ் வாட்டரும் தயார் செய்யலாம். எலுமிச்சம்பழத் துண்டுகளை கிளாசின் பக்கவாட்டில் வைத்து, எலுமிச்சை நீரை உட்கொண்டு உடலில் உள்ள நச்சுகளிலிருந்து விடுபடலாம்.
சாலடிலும் அனைத்து காய்கறிகளிலும் எலுமிச்சை சாற்றை பிழியலாம்.
உருளைக்கிழங்கு, அரிசி, பீட்ரூட் போன்ற ,மாவுச்சத்து,நிறைந்தஉணவுகளிலும் எலுமிச்சையை பயன்படுத்தவும்.

 

Read Previous

நாம் ஏன் குண்டாகிறோம் தீர்வுகளுடன் மருத்துவ விளக்கம்..!!

Read Next

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா..?? பற்பசையில் இதை மட்டும் கலந்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular