நீரிழிவு நோய்.. அதற்கான சிகிச்சை..!! அதலக்காயின் மருத்துவ குணங்கள்..!!

நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று #நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் தான். தற்போது இந்த பதிவில் அதலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

 

மருத்துவப் பயன்கள்

 

அதலகாயை பொறுத்தவரையில், உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய். ஆனால், இந்த காய் நம் தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடியது.

 

இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்தக் காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விதையை எடுத்து நாம் வைத்தாலும் இந்த செடி வளராது . ஏன்னென்றால் இந்த வகை செடி விதை கிழங்கால் வளரக் கூடிய ஒரு செடி.

 

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

 

மஞ்சள் காமாலை

மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடஉடல் எரிச்சல்

உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 

குடற்புழு

குடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

 

பாகற்காயைப் எப்படி பொரியல் மறறும குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிடலாம்

 

வற்றலாகவும் பயன் படுத்தலாம்.

Read Previous

ஆடாதொடை.. TB, மூச்சுத்திணறல் சரியாக..!! பயன்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular