நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை அகற்ற காலையில் ஒரு டம்ளர் இதை குடித்தாலே போதும்..!!

அதிக அளவிலான சளி, தொடர்ந்து வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் ஆகியவை நுரையீரல் சளிக்கான பொதுவான அறிகுறியாகும். இந்த நுரையீரல் சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விரைவில் சரி செய்து கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்

  • பால் ஒரு கிளாஸ்
  • இஞ்சி ஒரு துண்டு
  • மிளகு ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை அளவு
  • தேன் சிறிதளவு

செய்முறை

  • ஒரு உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு நன்றாக தட்டி வைத்துக்கொள்ள வேண்டும்இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு மிளகினை எடுத்து அதனை நன்றாக இடித்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்பளர் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும் .
  • அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்பளருக்கு வடிகட்டிக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளிகள் முழுவதும் கரைந்து வெளியேறிவிடும்.

Read Previous

முடிவில்லா முடி உதிர்தல் பிரச்சனையை போக்கும் வழிமுறைகள்..!! இதோ உங்களுக்காக..!!

Read Next

வீட்டில் செல்வம் செழிக்க இந்த ஆன்மீக வழிகளை பின்பற்றினால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular