நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்..!!

நம்மில் பலருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் சளி தொல்லையும் ஒன்று. ஆரம்ப நிலையில் சரி செய்ய தவறினால் அவை நாளடைவில் நுரையீரல் சரியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

இதனால் வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூக்கில் நீர் ஒழுகுதல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகிய பிரச்சினைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி பானம் செய்து பருகினால் நுரையீரல் சளி பிரச்சனை உடனடியாக சரியாகும்.

தேவையான பொருட்கள்

  1. கருந்துளசி
  2. ஓமவள்ளி
  3. வெற்றிலை
  4. சுக்கு
  5. நாட்டு சர்க்கரை
  6. மிளகு,
  7. சீரகம்

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒன்றரை டம்பளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின் அதில் ஓமவள்ளி, துளசி, வெற்றிலை ஆகியவற்றை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு அதனுடன் சுக்கையும் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிளகு மற்றும் சீரகம் தேவையான அளவு எடுத்து தனியாக இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்,1 1/2 டம்ளர் 1 டம்பளர்  வரும் வரை கொதிக்க விட்டு ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

பின் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நுரையீரலில் தேங்கி கிடந்த நாள் பட்ட சலுகைகள் முழுவதும் கரைந்து உடலை விட்டு வெளியேறிவிடவும்.

Read Previous

குளிர்காலத்தில் இந்த பானத்தை அருந்தினால் நோய் உங்களை நெருங்காது..!!

Read Next

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular