நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளிகளை கரைத்து வெளியேற்ற இதை குடித்தால் போதும்..!!

நமக்கு சாதாரண சளி பாதிப்பு ஏற்பட்டாலே அது குணமடைய ஒரு வாரமாகும், நெஞ்சு சளி என்றால் சொல்லவா வேண்டும்..? அவற்றை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்தி விட முடியும்.

நெஞ்சு சளிக்கான அறிகுறி

  • அதிக சளி
  • வறட்டு இருமல்
  • தலைபாரம்
  • நெஞ்செரிச்சல்
  • தொண்டை எரிச்சல்
  • சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்
  • சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்

நெஞ்சு சளி நீங்க கசாயம் செய்வது எப்படி.?

தேவையான பொருட்கள்

  • இஞ்சி
  • மிளகு
  • கொத்தமல்லி விதை
  • திப்பிலி
  • மஞ்சள்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, திப்பிலி ஆகிய அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்துக்கொண்டு ஒரு உரலில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ள மூலிகை பொருட்களை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து காய்ச்சிய கசாயத்தை ஒரு டம்பளரில் வடிகட்டி குடித்து வருவதால் கடுமையான நெஞ்சு சளி சில நாட்களில் குணமடையும்.

Read Previous

அதிக உடல் உஷ்ணத்தை குறைக்கும் எளிய வீட்டு முறை வழி இதோ..!!

Read Next

மலக்குடலில் தங்கி உள்ள நாட்பட்ட மலத்தை அரை மணி நேரத்தில் வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular