
நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம்:
சாப்பிட்டவுடன் தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள். இது நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி வழங்கக்கூடிய மூலிகை. நம் நுரையீரலுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகள் சளி பிரச்சனைகளை தீர்க்கும் குணம் வெற்றிலைக்கு உண்டு. நமது நுரையீரலை பாதுகாக்க வாரம் ஒரு முறை வெற்றிலை கஷாயம் வீட்டில் காட்சி குடிக்கலாம்.
தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்:
வெற்றிலை 10
மிளகு 2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
கிராம்பு ஒரு டீஸ்பூன்
சுக்கு சுண்டு விரல் அளவு ஒரு துண்டு
தண்ணீர் ஒரு லிட்டர்
முதலில் வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து கல் குழவியில் வைத்து இடித்து தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கஷாயமாக குடிக்கவும். சுலபமாக உங்கள் நுரையீரலை பாதுகாப்பதோடு உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசாயம் இது. கூடுதலாக வாய் துர்நாற்றம் மற்றும் செரிமான கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது.