நூதன முறையில் லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட்..!! வெளியான தகவல்..!!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாயியின் வழக்கை முடித்து வைப்பதற்கு ராம் கிரிபால் என்ற சப் இன்ஸ்பெக்டர், அவரிடம் 5 கிலோ உருளைக் கிழங்குகள் வேண்டும் என லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த லஞ்சம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து இச்சம்பவம் போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவலரிடம் விசாரணை நடத்தியதில் உருளைக்கிழங்கு என்ற வார்த்தை பணத்தை குறிக்கும் CODE WORD என்பது தெரியவந்துள்ளது.