நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் துளசி ரசம்..!! இப்படி செய்து பாருங்கள்..!!

துளசி மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. துளசி அதிக அளவு ஆக்ஸிஜனை வழங்கக்கூடிய ஒரு செடி வகை. எனவே தான் பலரும் காலையில் துளசியை சுற்றி வந்தால் உடலுக்கு நல்லது என்று கூறுவார்கள். சிலர் துளசியை பார்த்தாலே இரண்டு வாயில் போட்டு மென்று விடுவர் காரணம் துளசியில் அந்த அளவு நன்மைகள் நிறைந்து இருக்கிறது. இந்த துளசியை ரசம் வைத்து சாப்பிட துளசி மற்றும் மிளகு சேர்ந்து நெஞ்சு சளியை நீக்கி நல்ல நிவாரணம் தருகிறது.

இந்த துளசி ரசம் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் முழு மல்லி, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும். சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு ஒரு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும். ஐந்து பல் பூண்டினை இடித்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் சேர்த்து வதக்கிய பிறகு காம்புகள் நீக்கிய துளசியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து ஒருமுறை நன்கு வதக்க வேண்டும்.

பிறகு நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளியை கைகளால் மசித்து அதில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்த தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கரைசலை வானலியில் ஊற்றி ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட வேண்டும். ரசம் கொதித்ததும் இதில் கொத்தமல்லி தழைகளை தூவி சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

அவ்வளவுதான் சளி தொல்லையை விரட்டி அடிக்கும் துளசி ரசம் தயார்.

Read Previous

மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை..!!

Read Next

3 நாட்களில் 100 கோடி வசூலை அள்ளிய அமரன் திரைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular