
- நெத்திலி வறுவல்
தேவையானவை :
நெத்திலி மீன் – 1/2 கிலோ (தலை, குடல் நீக்கியது)
மிளகாய்த்தூள் -3 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை -2 கொத்து
தனியாத்தூள் -4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -4 குழிக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் -1 /2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – 2
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
1.நெத்திலி மீனை ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அலச வேண்டும்.ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு,மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது 15 நிமிடம் ஊற விடவும்.
2.கடாயில் 4 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, பிசறி வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.
3.பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும்.இஞ்சி பூண்டு விழுதைத் தேவையெனில் பயன்படுத்தலாம் .