நெனச்சது உடனே நடக்கனுமா??.. எல்லாம் வல்ல சித்தரை கும்பிடுங்க..!! 7 நாளுல நடந்திடும்..!!

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள எல்லாம் வல்ல சித்தரை வணங்கி வருவதால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவனின் நேரடி அவதாரமான இவர் பூமியில் தோன்றி பல அதிசயங்களை செய்தார். அதாவது குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் அளிப்பது. ஏழைகளை பணக்காரர்களாக மாற்றுவது. நோயுற்றவர்களை குணமாக்குவது என பல அதிசயங்களை நிகழ்ந்தினர்.

பரிகாரங்கள்

இவரை மனதை ஒரு நிலை படுத்தி வணங்கி வந்தால் நினைத்தது நிறைவேறும். குழந்தை இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள, காதல் கைகூட இவரை வணங்கி வந்தால் கண்டிப்பாக நிறைவேறும்.

வழிபாடுகள்

7 நாட்கள் விரதம் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள இவரை சென்று தரிசிக்க வேண்டும். இவரை வழிபடும் இந்த 7 நாள்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் அசைவ உணவுகளை தவிர்த்து முழு மனதுடன் இவரை வழிபட்டு வர வேண்டும்.

முதல் நாள் செல்லும்போது அவரை ஒரு சுற்று சுற்றி வந்து வழிபட வேண்டும். இரண்டாவது நாள் சுற்றும்போது 2 சுற்று சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் கணக்கில் சுற்றி வர வேண்டும். நாம் ஒரு நிலை படுத்தி வணங்கி வரும்போது 7 வது நாள் கண்டிப்பாக நாம் நினைத்தது நடக்கும்.

Read Previous

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்..!!

Read Next

நைட் சரியா தூங்கறதில்லையா நீங்க.. லேட்டா தூங்கற ஆளா.. அப்படீன்னா முதல்ல இதைப் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular