• September 29, 2023

நெய்வேலி விரைந்த தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்..!!

நெய்வேலியில் இன்று பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி போலீசார் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இந்நிலையில், தகவலறிந்த தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நெய்வேலி புறப்பட்டார். மேலும், இது குறித்து, “போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

திருநெல்வேலி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்..!!

Read Next

தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பாக காத்திருப்பு போராட்டம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular