
Oplus_131072
நெய் அப்பம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நெய் அப்பம் செய்வது எப்படி..??
சிறிதளவு தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாகவும் ஒரு கப் பச்சரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த அரிசி மற்றும் ஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்க்கவும் மாவு தண்ணியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் குழிப்பணியார கல்லை வைத்து சூடானதும் மாவை ஒவ்வொரு குழியிலும் நெய் ஊற்றி சட்டியை குழிப்பணியாரம் மூடி போட்டு வேக விடவும் வெந்தவுடன் அப்பத்தை திருப்பி விட்டு வேக விடவும் நன்றாக வெந்தவுடன் எடுத்தால் நெய் அப்பம் தயார். இந்த நெய் அப்பம் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டியாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் வகையிலும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர்கள். மறக்காம உங்க வீட்ல ட்ரை பண்ணி குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.