
நெற்றியில் கொப்புளங்கள் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கிறதா…?? அதுக்கு இத மட்டும் செய்யுங்க போதும்..!!
ஒரு சிலருக்கு அதிகமாக வெயிலில் செல்வதன் காரணமாகவும் அதிகமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதன் காரணமாகவும் ஒரு சிலருக்கு உடலின் சூடு காரணமாகவும் கூட நெற்றியில் கொப்புளங்கள் அவ்வப்போது வந்து போகும். அதற்கு இயற்கையான முறையில் வீட்டிலேயே இதை மட்டும் செய்தால் போதும் நெற்றியில் உள்ள கொப்புளங்கள் கானாக போய்விடும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நெற்றியில் கொப்புளங்கள் வந்தால் சீரகம் மற்றும் தேங்காயை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து போட வேண்டும். மேலும், வேப்பம் துளிர் உடன் மஞ்சள் அரைத்து அதை முகத்தில் தடவுதல் மூலம் முகத்தில் உள்ள கருமை புள்ளிகள் நீங்கும். மேலும் நெற்றியில் கொப்பளம் உள்ளவர்கள் அதிகமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து காய்கறி பழங்கள் என சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். நெற்றியில் கொப்புளங்கள் உள்ள இடங்களில் கற்றாழை சாறு தடவுவதன் மூலமும் கொப்புளங்களை அடியோடு விரட்டலாம். இதையெல்லாம் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.