
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது 75 லட்ச கள்ளநோட்டு பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி காவல் துறை வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தபோது அந்த வண்டியில் 75 லட்சம் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டு போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர், கள்ள நோட்டுகளை கொண்டு சென்ற சீனுசாமி, தங்கராஜ், விஷ்ணு சங்கர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்..!!