நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..!! பீதியில் மக்கள்..!!

தமிழகத்தில் அமைந்துள்ள நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, காட்டெருமைகள், மான், சிறுத்தை, புலி ஆகிய பல்வேறு வகையான காட்டு விலங்குகள் உள்ளது.

இந்த விலங்குகள் அவ்வப்போது இரையை தேடி மலையை விட்டு கீழே இறங்கி ஊருக்குள் வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சிவந்திபுரம் ஆகிய கிராமங்களுக்கு அடிக்கடி காட்டு விலங்குகள் வருவது வழக்கமாய் கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபநாசம் அருகே உள்ள சில பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கூண்டு வைத்து நான்கு சிறுத்தைகள் பிடிபட்டது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர். குவிந்திருந்தனர். அப்போது இன்று பிற்பகல் நேரத்தில் மணிமுத்தாறு பகுதியில் பிரதான சாலையில் கரடி ஒன்று சாவகாசமாய் சாலையை கடந்து சென்றுள்ளது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் பயந்து அலறி அடித்து ஓடினார். இதை பார்த்து பயந்த கரடியும் ஓடி சென்று அங்குள்ள மரத்தின் கிளையின் மேல் ஏறிக்கொண்டது.

இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் செயலில் வனத்துறையிளர் தீவிரமாய் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக கரடி அந்த மரத்திலேயே இருப்பதால் வனத்துறையினர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

Read Previous

தமிழகத்தை வாட்டி வதைக்க போகும் வெயில்..!! நான்கு நாட்களுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Read Next

40 வயதிலேயே ஓய்வு பெற நினைத்தேன்..!! ஏ ஆர் ரகுமான் ஓபன் டாக்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular