நெல்லை மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கிய இந்தி கூட்டணி..!!

திருநெல்வேலியில் குடிநீர் மற்றும் வடிகால் ஆகிய முக்கிய ஒப்பந்தங்களுக்கு மேயர் ஒப்புதல் வழங்கவில்லை எனக் கூறி திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக மற்றும் தலைமை கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது “இன்று 28.06.2024 மாலை 4:30 மணிக்கு நடைபெறுவதாக திருநெல்வேலி மாநகராட்சியின் அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் கீழ்கட்ட நியாயமான காரணங்களுக்காக மாநகராட்சி அனைத்து வார்டு பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொள்ள இயலாத நிலையில் புறக்கணிக்க முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

பொதுமக்கள் அத்தியாவசிய அவசர தேவையான மழை நீர் வடிகால் ,கழிவு நீர் ,குடிநீர் பகிர்மான குழாய் பதித்தல் மற்றும் அவற்றை பழுதுபார்த்தல், பள்ளி கட்டிடங்கள் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் எடுக்கப்படும் என்பதற்கான ஒப்புதல் இன்றைய சாதாரண மற்றும் அவசர கூட்டத்தில் இடம்பெறாமல் வணக்கத்திற்குரிய மேயர் சரவணன் அவர்கள் சுயநலன் கருதி இப்பணியை ஒப்புதல் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. கோப்புகள் பெரும் அளவில் தேங்கியுள்ளது. ஆகவே மேயர் அவர்களின் எதிர்ச்சியான போக்கினை கண்டித்து இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை”, என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

8,326 அரசு காலிப்பணியிடங்கள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு..!! உடனே அப்ளை செய்யவும்..!!

Read Next

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு..!! சிக்கல் சிக்கிய 2 டிஎஸ்பி உள்ளிட்ட ஒன்பது காவல்துறையினர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular