நேர்மையாக வாழ மனப்பூர்வமான பழக்கங்கள் நமது வாழ்வில் அவசியம். நேர்மையாக ஒவ்வொரு நாளையும் கடந்து செல்ல நமது எண்ணங்கள் எல்லாம் சிறந்தவைகளாக இருக்க வேண்டும் அப்படி சிறப்பு மிகுந்த எண்ணங்களால் நமது வாழ்க்கை அழகாக மாறும். நம் வாழ்க்கை மட்டுமல்லாமல் நமது சுற்றியுள்ள உறவுகளின் வாழ்க்கையும் நம்மால் அழகாக மாற்ற முடியும் நமது எண்ணத்தில் நேர்மை இருந்தால்..
நன்றியுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நாளையும் நன்றியுடன் தொடங்குங்கள் நன்றி சொல்வதன் மூலம் உங்களுக்கு நேர்மையான எண்ணங்கள் தோன்றும். கவனத்துடன் சுவாசத்தில் ஈடுபடுங்கள். தினம்தோறும் நீங்கள் சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள் சரியான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் கவனத்துடன் சாப்பிடுவது வளர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட பணிகளில் கவனத்துடன் செயல்படுங்கள் உங்கள் பணிகளில் தீவிர கவனமும் நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம். மேலும் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கையும் உங்கள் செயல்கள் மீது கவனமும் இருக்கும் பட்சத்தில் உங்களது வாழ்க்கை சிறப்பாகவும் நேர்மையாகவும் அமையும்..!!