நைஜீரியா நாட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா வடக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள குவோசா நகரில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திருமண விழா ஒன்றில் குழந்தைகளுடன் வந்த பெண் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனை, இறுதி சடங்கு என அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 18 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 48 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதல் இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மேற்கு அமெரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு எதிரான தாக்குதல் நடைபெற்று வருகின்றது. மேலும் பொதுமக்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற கொடூர செயல்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.