• September 24, 2023

நைஜீரியாவில் பல விவசாயிகள் தீவிரவாதிகளினால் படுகொலை..!!

நைஜீரியாவில் பல விவசாயிகள் தீவிரவாதிகளினால் படுகொலை. 

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கின்றது. நைஜீரியா நாட்டில் ஒரு சாகாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு தாக்குதலில் கடந்த வாரம் 25 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் வயலில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது போகா ஹராம் பயங்கரவாதிகள் விவசாயிகளை தாக்கி அவர்களின் தலைகளை வெட்டி துண்டாக்கியுள்ளனர்.

தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஒரு விவசாயி அபூபக்கர் மஸ்தா இது குறித்து கூறுகையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை ஏந்திய படி நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்தார்கள். வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்து அவர்களை கொலை செய்தனர். என் நண்பர்கள் 10 பேரும் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக  கொல்லப்பட்டனர். அவர்களின் பிணங்களை நான் கண்டேன் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

போகா ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் உள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு நைஜீரியாவில் 2000 ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. அதனால் அந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் இந்த வன்முறை இயக்கம் பரவியிருக்கிறது.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐஎஸ் எனும் அமைப்பும் அந்த நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

Read Previous

முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!

Read Next

ஓநாயாக மாறிய மனிதன்..!! மனித உறவுகளில் இருந்து விடுபட்டு விட்டேன்… வைரலான புகைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular