நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா?..
நைட் ஷிப்ட் வேலைகளால் பெரிதும் ஆரோக்கியத்தை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்பவர்களின் தூக்க நிலை மாறுவதால் மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை ஏற்படலாம். இதனால், அவர்களின் உடலின் ஆற்றலிலும் மாற்றங்கள் ஏற்படும். வாழ்வியல் சூழலும், சர்காடியன் ரிதம் எனப்படும் உடல் நிலையும்மாறுவதால் இது உடலில் பலவித ஹார்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இது பாலியல் செயல்பாட்டை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
சராசரியாக, ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும், குறைந்தபட்சம் தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டியது அவசியம் என்றும் இல்லாவிட்டால் அவர்களுடைய இனப்பெருக்க உறுப்புகளுக்கு பிரச்சனை ஏற்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் பகலில் எட்டு மணி நேரம் தூங்குவது இல்லை. வேலைமுடித்து வீட்டிற்கு வந்தபின்னர் டிவி பார்ப்பது, குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவு செய்வது என்று இருந்துவிட்டு 4 அல்லது 5 மணி நேரமே தூங்குவதாகவும், இதனால் நைட் ஷிப்ட் பணிபுரிபவர்களுக்கு மிக விரைவில் ஆண்மை குறைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.




