நொடியில் இடிந்து விழுந்த 22 அடுக்குமாடி கட்டிடம்…
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள சார்லஸ் ஏரியில் இந்த நகரத்தின் சின்னமாக விளங்கிய ஹெர்ட்ஸ் டவர் என்ற 22 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, கடந்த 2020 ஆண்டில் ஏற்பட்ட லாரா மட்டும் டெல்டா என்ற சூறாவளியில் அந்த 22 அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்துள்ளது, இதனைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் யாரும் புழக்கமின்றி பயன்படுத்தாமல் கட்டிடம் கைவிடப்பட்டுள்ளது, இதனை அடுத்து நான்கு ஆண்டு காலமாக அந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்த நிலையில் சார்லஸ் ஏரியில் உள்ள இந்த கட்டிடமானது வெடி பொருட்கள் கொண்டு தகர்க்கப்பட்டது, இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது மேலும் இந்த கட்டிடத்தை மிகவும் நினைவுபடுத்தக்கூடிய அமெரிக்காவின் நினைவுச் சின்னமாக பலரும் தங்களின் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர், மேலும் இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளத்தில் இந்த காணொளிக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்..!!




