நொடி பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்.. அனுபவ உண்மை..
நாம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தூள் பெருங்காயம்மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கலாகும்.
பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை பயக்கிறது.இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
பெருங்காயப் பொடி தயாரிக்கும் முறை!
நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரும் பெருங்காய கட்டியை உடைத்து, ஒரு வானிலையில் போட்டு சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.பின்பு ஆற விட்டு இதனை நன்றாக பொடி செய்து கண்ணாடி குப்பியில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பொடியை சொத்தைப் பல்லுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?
பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை சிறிதளவு சூட்டுடன் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.




