இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருப்பதால் அவர்களின் உடல்நிலை சில நேரங்களில் மோசமான நிலையை அடைந்து விடுகிறது, மருத்துவமனைக்கு சென்றாலும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறுவது வழக்கம்..
அப்படிப்பட்ட திரவ உணவுகளை பற்றி நாம் காண்போம், இளநீர், மோர், தண்ணீர், பசும்பால், மற்றும் பல வகை ஜூஸ்கள், இவைகள் திரவ உணவுப் பொருட்களாக பயன்படுகிறது, அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, கொய்யா, மற்றும் சாத்துக்குடி ஆகும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி வகைகள் பீட்ரூட், முட்டைகோஸ், குடைமிளகாய், கேரட், காலிஃப்ளவர், இஞ்சி, மஞ்சள், பூண்டு மற்றும் கத்திரிக்காய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியவை, அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள் வேப்பிலை வெற்றிலை தூதுவளை கற்பூரவல்லி துளசி முடக்கத்தான் தலை மற்றும் முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடுகிறது..!!