
இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்குமே குறைந்து தான் இருக்கிறது. இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்னமோ சாப்பிடுகிறோம். இந்நிலையில் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை துளசியை கொண்டு அதிகரிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா.. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி கஷாயம்.
தேவையான பொருட்கள்:
துளசி இலை நான்கு
வெற்றிலை பாதி இலை
கற்பூரவள்ளி பாதிஇலை
வேப்பிலை இரண்டு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் ஒரு சிட்டிகை
சுக்குத்தூள் ஒரு சிட்டிகை
செய்முறை :
இவை அனைத்தையும் ஒரு டம்ளர் நீருடன் சேர்த்து பாதி டம்ளராக சுண்டும் வரை கொதிக்க வைத்து காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும். தேவைப்பட்டால் கஷாயம் சூடு ஆறியவுடன் தேன் சேர்த்தும் பருகலாம் . இவ்வாறு குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி வேறு சில பலன்களும் இதை குடிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். உச்சி முதல் பாதம் வரை அனைத்து செல்களையும் தட்டி எழுப்பி அவற்றை சுத்தப்படுத்தி அதீத பலத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரவல்லது. மேலும் உடல்நிலை சரியில்லாத போது உடலில் உள்ள வைரஸ் பாக்டீரியா உணவின் விஷத்தன்மை புதிய மற்றும் பழைய வியாதிகள் என அனைத்தையும் போக்கிவிடும்.