நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

முதலில் உங்கள் வீட்டிலுள்ள Chemical கலந்த Soaps, Shampoo,Paste, கொசுவர்த்தி, ஊதுபத்தி, கற்பூரம், Food Color, make up items …… தூக்கி எரியுங்கள்.சூரிய உதயத்துக்கு முன்பு (60 mins) எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு குளியுங்கள். குளிக்கும் நீரில் மஞ்சள், வேப்பிலை, கல் உப்பு சேர்க்கலாம். எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம்.

தினமும் 2 முறை பல்விலக்கி ( பற்பொடி) oil Pulling செய்யனும்.தினமும் அரை மணி நேரம் வியர்வை வர மண்ணில் வேலை செய்வது முக்கியம். மூச்சு பயிற்சி, சூரிய நமஸ்காரம் நல்லது. மாலை நேரத்து சூரிய ஒளியில் இருப்பது நல்லது. வாரத்துக்கு 2 முறை எண்ணை குளியல் கட்டாயம் எடுக்கணும்.

இரவில் நேத்ர ஜோதி தைலத்தை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது கண்களுக்கு இட வேண்டும் . இரு காதுகளுக்கு சிறிது எண்ணை விடுவது அவசியம். வருடத்தில் இரண்டு தடவை எனிமா எடுக்க வேண்டும் .குளிர் சாதன உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும் . மூன்று வேளையும் சூடான உணவையே எடுக்க வேண்டும். தொண்டை பகுதி எப்போதும் கதகதப்பாக இருப்பது அவசியம்.வள்ளலாரின் மூக்கூட்டு சூரணத்த காய்ச்சி குடிங்க.

பசுமஞ்சள், சின்ன வெங்காயம், பூண்டு, தோல் சீவிய தெளிந்த இஞ்சிச்சாறு, நெல்லி, எலுமிச்சை இவை எல்லாவற்றையும் பச்சையாக எடுப்பது மிக மிகசிறப்பு. சிறிது தேன் கலந்தும் எடுக்கலாம். Vitamin – Cயில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டு.கருங்குருவை, கருப்புக் கவுனியில் கஞ்சி காய்ச்சி குடிப்பது நலம். தூய மல்லி சாதம், முருங்கை, சுண்டை, பிரண்டை, வேப்பம் பூ, வாழைப்பூ சேர்க்கலாம்.

செக்கு எண்ணை, பனை கருப்பட்டி , கரும்பு சர்க்கரை பயன்படுத்துவது நல்லது. வெள்ளை சர்க்கரையை, மைதாவை தவிர்ப்பது நல்லது. தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணை(அ) நல்லெண்ணை உள்ளுக்கு எடுப்பது நலம்.பசித்தால் மட்டுமே உணவை எடுக்க வேண்டும் . நீங்கள் எடுக்கும் உணவு கட்டாயம் இராசாயனம் கொண்டு விளைந்தாக இருக்கவேகூடாது. பருவத்தில் பயிர் செய்த உணவே சிறந்த உணவு. அரிசி, பருப்பு,காய்கறிகள், கீரைகள், மூலிகைகள்…… முடிந்த வரை உங்கள் உணவை நீங்களே உற்பத்தி செய்யுங்கள். தூய வெற்றிலை, களி பாக்கு, சூளை சுண்ணாம்பு சேர்த்து தினமும் தாம்பூலம் தரிப்பது நன்று.

சூரிய மறைவுக்கு முன்பே இரவு உணவை முடித்தாக வேண்டும் . தூங்கும் போது சூடு நீரில் காட்டன் துணியை விட்டு பிழித்து பாதத்தில்லிருந்து கால் மூட்டு வரை ஒத்தடம் தரலாம், நம் உடலிலுள்ள வாயு, பித்தம், கபத்தை சமநிலைப்படுத்தும்.மாலை நேரத்தில் இலுப்பெண்ணை கொண்டு தீபம் ஏற்றவும். நிலம், நீர், காற்று மாசடைந்த இடத்தில் வாழ கூடாது.

*மருந்து, மாத்திரை, ஊசி என்று உங்கள் உடலுக்குள் செலுத்தி Chemical Container ஆக மாற்ற வேண்டாம்ங்க. உடலும், உயிரும் நன்றாக இருக்கும் வரை அதன் அருமை தெரியாது…. வரும் முன் காப்பதே சிறப்பு.

Read Previous

காலியான கூடு..!! கண்களில் கண்ணீர் வர வைத்த சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

புளி துவையல் செய்வது எப்படி..?? கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular