நோய் வருவதை தவிர்க்க தண்ணீர் குடிங்க..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Oplus_131072

 

சிறுவயதில் இருந்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் அவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 தம்ளர் தண்ணீர் குடித்தால் பலநோய்கள் வராமல் தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரகம் நன்றாக வேலை செய்யவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மூட்டு வலி, முதுகு வலி பாதிப்பை தவிர்க்கவும், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல் வலியினை நன்கு குறைக்கும்.

கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால் `லிம்பாடிக் குழாய்களின்’ மூலம் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது. நன்கு தண்ணீர் குடிப்போருக்கு சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் குடிப் பதே மூட்டுகளில் வழுவழுப்பு தன்மைக்கு உதவுகின்றது.

தசை பிடிப்பு, சோர்வு போன்றவை உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படுவதன் காரணம் போதிய தண்ணீர் குடிக்காமையே. புரதம் உடலில் சரிவர இருந்தாலே நல்ல சதை உருவாகும். இந்த புரதம் உடலில் சரியான முறையில் உருவாக்க தண்ணீரே காரணம். இல்லையெனில் அதிக கொழுப்பு உடைய உடலாகி விடும்.

உங்கள் தண்டுவடம் நன்கு தண்ணீர் எடுத்துக் கொண்டால் முதுகு வலி குறையும். உடலில் கொழுப்பு அதிகம் சோர்ந்து உடல் பெருத்து விட்டதாப நன்கு தண்ணீர் குடிப்பதனையும் ஒரு பழக்கமாக்கி கொள்ளுங்கள். அநேகர் படுக்கை பக்கத்தில் பிஸ்கட், பன் என்று வைத்திருப்பார்கள்.

இவர்கள் பாதி ராத்திரியில் பசி என்று எழுந்து சாப்பிடுவர். இவர்கள் ஒரு தம்ளர் தண்ணீர் அருந்த இந்த முறையற்ற உணவு பழக்கம் நீங்கும். அநேகர் தாகத்தினை பசியென்று தவறாக நினைத்து அடிக்கடி உண்பர். இவர்கள் முதலில் தண்ணீர் அருந்த முறையற்று உணவு அருந்தும் வழக்கம் நீங்கி விடும்.

நீங்கள் `டயட்’ செய்து இளைக்க வேண்டுமா? உணவு அருந்துவதற்கு 10 நிமிடம் முன்னால் ஓரிரு தம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு குறைவாகவே உண்ண முடியும். எடை தன்னால் குறைந்து விடும்.

Read Previous

சொகுசுப் பேருந்து, லாரி மோதல்: 9 பேர் காயம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

தொடரும் கட்சி தாவல்.. தேர்தல் நேரத்தில் சலசலப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular