பகீர்.‌.கள்ளகாதலிக்கு 10 லட்சம் வரை செலவு செய்த காதலன்.. திரும்ப பணம் கேட்டு தராததால் தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம்.!!

திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வருபவர் கமலேஷ்- மஞ்சு தபதினர் கமலேஷ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 2013 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். இந்த சூழலில் கமலேசின் மனைவி மஞ்சுவிற்கும் அதே பகுதியை சார்ந்த குப்பன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாய் மாறியது. இதனால் குப்பன் தனது கள்ளக்காதலியான மஞ்சுவிற்கு 10 லட்சம் வரை பணம் செலவு செய்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கள்ளக்காதலர்களான மஞ்சுவும் குப்பனும் கருத்து வேறுபாடு காரணத்தினால் பிரிந்தனர்.

இந்த சூழலில் குப்பன் மஞ்சுவிற்காக செலவு செய்த ரூபாய் 10 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த குப்பன் மஞ்சுவின் வீட்டிற்கு சென்று தன் கையோடு கொண்டு சென்ற பெட்ரோலை மஞ்சுவின் மீது ஊற்றி தீ பற்றி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்,

இதை தொடர்ந்து மஞ்சுவின் அலரல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினார் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைவிக்கு அழைத்து சென்றனர். பின் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மஞ்சுவை தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த குப்பனை கைது செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சு சிகிச்சை பலனின்றி பரிதாபாய் உயிரை இழந்தார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பேச மறுத்த இளம் பெண்..!! வற்புறுத்திய இளைஞர்..!! பின்னர் நடந்த கொடூர சம்பவம்.!!

Read Next

பெரும் சோகம்.. காப்பாற்றுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் பறிபோன 3 உயிர்கள்..!! ஈரோடு அருகே பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular