
சேலம் மாவட்டத்தில் தலையாணையால் அழுத்தி கணவனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக நாடகம் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அவரது வாக்குமூலம் பல திடுக்கிட்டும் உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சார்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 32) இவரது மனைவி நிவேதிதா (வயது 27) இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த சுந்தர்ராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி தறி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் சடலமாய் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார், இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கில் தொங்கியது போல் கழுத்தில் இருக்கம் இல்லாமல் மூச்சு திணறி இறந்து இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து காவல்துறையினருக்கு அவரது மனைவி நிவேதிதா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்தது அம்பலமாகியது. இது தொடர்பான காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ள அவர் கணவர் ஊரில் தொழில் செய்து வரும்போது தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது பள்ளி தோழி வித்யாவின் மூலம் தினேஷ் என்ற நபர் அறிமுகமாகனார்.
அதனை தொடர்ந்து தினேஷ் மற்றும் நிவேதிதா இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுந்தர்ராஜ் நிவேதிதாவை கண்டித்ததோடு அவரது செல்ஃபோனையும் பறித்து வைத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிவேதிதா தனது தோழி வித்யா மற்றும் கள்ளக்காதல் தினேஷ் ஆகிய உதவியுடன் சுந்தர்ராஜுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து அவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து பின் மூன்று பேரும் சேர்ந்து அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டதை வாக்குமூலத்தில் ஒப்பு கொண்டனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் நிவேதிதா, தினேஷ் மற்றும் வித்யா மூன்று பேரை கைது செய்து உள்ளனர்.