
கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அமைதியான பள்ளிக்கல் கிராமத்தில் அதிகாலையில் சேவல் கூவுவதால் இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பஞ்சாயத்து ஆயிருக்கிறது பள்ளிக்கல் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் சேவல் கூவுவதால் இரவில் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என கூறி இந்த புகாரை பதிவு செய்துள்ளார் முதியவர்…
தினமும் அதிகாலை 3 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரான அனில் கபூர் சேவல் இடைவிடாமல் கூவ தொடங்குவதாகவும் இதனால் தனது தூக்கம் கெட்டு அமைதியான வாழ்க்கை சீர்குலைவதாகவும் கூறி வருவாய் கோட்ட அதிகாரியிடம் மனு அளித்தார் முதியவர். இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட வருவாய் அதிகாரி விசாரணையை தொடங்கினார் பிரச்சனைக்கு காரணம் சேவல்தான் என்பதால் இருவரையும் அழைத்து விசாரித்தார் பின்னர் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் அப்போது அணில் குமார் தனது வீட்டின் மேல் தளத்தில் சேவலை பராமரித்து வந்தது தெரிய வந்துள்ளது மேலும் சேவல் எழுப்பும் குரல் ராதாகிருஷ்ணனை உண்மையிலேயே தொந்தரவு செய்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது இதை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவரது கோழி கூண்டை மேல் தளத்தில் இருந்து வீட்டின் தெற்கு பக்கத்திற்கு மாற்றும்படி ஆர்டிஓ உத்தரவிட்டார் இதற்காக 14 அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த பலரும் சமூக ஊடகத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எங்கள் ஊரிலும் சேவல் கூவுகிறது ஆனால் நாங்கள் சேவல் காரனிடம் சண்டைக்கு போவது கிடையாது எங்கள் ஊரிலும் ஆடி மாசம் ரேடியோ கூவுகிறது நாங்கள் சண்டைக்கும் புகார் தருவதற்கும் செல்வதில்லை பதிலுக்கு சமூக வலைதளத்தில் நகைச்சுவையாக பதிவிடுகிறோம் இது பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது என்று கூறுகின்றனர் இன்றைய தலைமுறைகள்..!!