மூளைக்கு செல்லும் நரம்புகளில் அல்லது ரத்த ஓட்டங்களில் அடைப்போ அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படுகிறது..
முகம் கை கால்களில் ஏற்படும் திடீர் பலவீனம் பக்கவாதத்திற்கான ஒரு முக்கிய அறிகுறி ஆகும், திடீரென ஏற்படும் ஞாபகம் மறதி பக்கவாதத்திற்கான ஒருவித அறிகுறி ஆகும், ஏதாவது ஒரு பகுதி அதிக நேரம் மறுத்துப் போகிறது என்றால் அதுவும் பக்கவாதத்திற்கான அறிகுறியே ஆகிறது, மேலும் தலைவலி அடிக்கடி எடுப்பது அல்லது மாத்திரை மருந்து சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படுது இவையெல்லாம் பக்கவாதத்திற்கான அறிகுறியே, இன்னும் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் இல்லை என்றால் அதுவும் பக்கவாதத்திற்கான ஒரு அறிகுறிதான், மேலும் கண்களில் பார்வை மங்குவது, திடீரென நெஞ்சுவலி ஏற்படுவது, வாசனைத் தன்மை அறிய முடியாமல் போவதும் பக்கவாதத்திற்கான அறிகுறியே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!