பக்கோடாவை சுவையாக மட்டுமில்லாமல் சத்தாக செய்ய இதை சேர்த்துக் கொள்ளுங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

முருங்கைக் கீரையை நமது உணவுகளில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்பு சத்து மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இதை வைத்து சுவையான பக்கோடா எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 200 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
முருங்கைக் கீரை – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 2
சோம்பு – ஒரு டீஸ்பூன்
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை குட்டியாக வெட்டிக் கொள்ளவும். இதுடன் கீரை சோம்பு உப்பு கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் நீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து சூடான பிறகு எண்ணெய் ஊற்றி இந்த கலவையை உதிரியாக போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை பக்கோடா தயார்.

Read Previous

அடுத்தவரது நிலைமைகள் புரியாமல் அவர்களை தவறாக எண்ணக்கூடாது என்பதை புரிய வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

இல்லத்தரசிகளே கண்டிப்பாக இந்த வீட்டு பூஜை குறிப்புகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular