பங்குச் சந்தையில் அதிரடி..!! 400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர் சுதர்ஷன் பார்மா..!!

தற்போதைய காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்கு சந்தை என்பது ஒரு ஒரு பொது சந்தை ஆகும். இதில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த கூறுகள் நியாயமான விலையில் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. பங்கு சந்தையானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் 1500 க்கு மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது.பார்மா துறையைச் சேர்ந்த சுதர்சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது ஸ்மால் கேப் வகையை சேர்ந்த பங்கு ஆகும்.

இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து புதிய 52 வார உச்சத்தை தொட்டு ரூ. 424.35 புள்ளிகளைத் தொட்டது. மேலும், இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டில் பங்குதாரர்களுக்கு 398 சதவீத லாபத்தை அளித்து மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. இந்த பங்கு கடந்த வாரத்தில் சுமார் 21 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது, கடந்த மாதத்தில் இந்த பங்கு சுமார் 138 சதவீதம் லாபம் ஈட்டியது, இதேபோல், இந்த பங்கு கடந்த ஆறு மாதங்களில் சுமார் 470 சதவீதம், கடந்த ஆண்டில் 398 சதவீதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 574 சதவீதம் அதன் பங்குதாரர்களுக்கு லாபம் கொடுக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1020 கோடியாக உயர்ந்துள்ளது.

Read Previous

படித்ததில் பிடித்தது: ரசித்து உணர்வது தான் கல்யாண வாழ்க்கை..!!

Read Next

LIC அசத்தல் சேமிப்பு திட்டம்..!! தினசரி ரூ.100/- சேமிக்கலாம் வாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular