
பச்சை கற்பூரத்தில் உள்ள மகிமை நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் கூட ஒரு சிலர் சூடத்திற்கும் பச்சை கற்பூரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சை கற்பூரத்தை திருஷ்டி கழிக்கவும் கால் படும்படியான இடங்களிலும் சாதாரணமாக போட்டு விட்டு விடுகின்றனர். பச்சைக் கற்பூரம் என்பது தெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான பொருளாகும். இந்நிலையில் பச்சை கற்பூரத்தை இப்படி உபயோகத்தில் இருந்தால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள் அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்..
பச்சை கற்பூரத்தை திருஷ்டி கழிக்கவும் தண்ணீர் கரைத்து வீட்டை சுத்தம் செய்யவும் தண்ணீர் கரைத்து வீட்டில் தெளிக்கிறேன் என்று கால் படும்படியான இடத்தில் உபயோகம் செய்யாதீர்கள். பச்சை கற்பூரத்தை நாராயணனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பாலாஜிக்கு பச்சை கற்பூரம் இல்லாமல் அலங்காரம் நிறைவடையாது. இவ்வளவு மகிமை நிறைந்த பச்சை கற்பூரத்தை தவறாக இப்படி உபயோகிக்காதீர்கள். சூடம் என்று வட்ட வடிவத்திலும் சதுரமாகவும் கிடைக்கும் இந்த சூடத்தை திருஷ்டி கழிக்கவும் வீட்டை சுத்தம் செய்யவும் உபயோகிக்கலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள் தவறாக உபயோகம் செய்து இருந்தால் இனி அப்படி செய்யாதீர்கள்.