பச்சை ஆப்பிள்கள் சாப்பிடலாமா?.. என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?..
சிகப்பு ஆப்பிள்களை ஒப்பிடும் போது பச்சை ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. எனவே செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தப் பழங்களைச் சாப்பிட்டால், குறுகிய காலத்தில் உடல் எடை குறையும். தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மெழுகு தடவப்படாத பச்சை நிற ஆப்பிள்களை வாங்கி உபயோகிப்பது நல்லது.