பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கும் பொருட்களில் முக்கியமான ஒன்று பச்சை மிளகாய். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி , இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் பச்சை மிளகாய் சேர்த்தால் மிகவும் சிறந்தது. மேலும் இது உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பச்சை மிளகாய் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை இளமையாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.