பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ள இதில் தமிழகத்திற்கு 85 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள், ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட வங்கியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு:https://pnb.bank.in




