பஞ்சு போன்று இட்லி அரை கப் இதையும் ஊறவைத்து அரைங்க : புசுபுசு இட்லிக்கு நாங்க கேரண்டி..!!

எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்…

பெரும்பாலானவர் வீட்டில் இட்லி தோசை காலை உணவாக இருந்தாலும் மாவு அரைத்த முதல் நாளில் தான் இட்லி பஞ்சு போன்ற வரும் அடுத்த நாளில் தட்டோடு தட்டாக சப்பி போய்விடும்,நீங்களும் அவதிப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்,கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி இட்லி மாவு ஒரு முறை அரைத்து பாருங்கள் இட்டிலி புசுபுசுன்னு பஞ்சு போல வரும்…

இட்லி மாவு அரைக்க தேவையான பொருட்கள்..

* இட்லி அரிசி – 4 கப்
* உளுந்து – 1 கப்
* ஜவ்வரிசி – 1/2 கப்

இட்லி மாவு அரைக்கும் முறை…

* இவை அனைத்தையும் நன்கு கழுவி இட்லி அரிசி ஒரு பாத்திரத்திலும், ஜவ்வரிசி தனி பாத்திரத்திலும், உளுந்துடன் 5 வெந்தயத்தை சேர்த்து ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும் இவை அனைத்தும் சுமார் ஐந்து மணி நேரம் ஊற வேண்டும்.
* இப்போது கிரைண்டரில் முதலில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து நன்கு மைய அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும் அடுத்து ஊற வைத்து அரிசி மற்றும் ஜவ்வரிசி ஒன்றாக சேர்த்து நைசாக அளிக்கவும்.
* அடுத்ததாக இரண்டு மாவை ஒன்றாக சேர்த்து உப்பு கலந்து இரவு முழுவதும் குளிக்க விட்டு மறுநாள் காலை இட்லி தட்டில் மாவு ஊற்றி 10 நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்த பஞ்சு போன்ற இட்லி ரெடி.
* மாவு புளித்தபின் உப்பு சேர்ப்பதை விட மாவு அரித்தும் உப்பு சேர்த்து குளிக்க வைத்தால் இட்டிலி புசுபுசு என்று வரும்
* புளித்த மாவை அதிகம் பெறாமல் வீட்டிலும் ஊற்றினால் வீட்டிலும் மென்மையாக இருக்கும்
* அரிசி அளப்பதற்கு எந்த கப்பு பயன்படுத்தப்பட்டது அதே கப்பில் தான் மற்ற பொருட்களை அளக்க வேண்டும்..!!

Read Previous

குளிர்காலத்தில் வீட்டின் தரை ஜில்லென்று இருக்கிறதா? குளிரை சமாளிக்க இந்த முறைகளை பாலோ பண்ணுங்க…!!

Read Next

அனைவரும் விரும்பும் வகையில் சௌசௌ காய் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular